Breaking News

மகளிர் அமைப்புக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி.






சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இன்று (3) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


இந்த மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்தும் மகளிர் அமைப்புக்களால் உற்பத்தி செய்யப்பட்ட சுயதொழில்  பொருட்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டதோடு, அவற்றை  விற்பனை செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


இலங்கை பெண்கள் பணியகத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட செயலகம் ஒருங்கிணைப்பு செய்திருந்தது.(www.newstimetamil.com)



No comments