உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழ அறிக்கையிலிருந்து :
சஹ்ரானின் தலைமறைவு
தொடர் - 13
தமிழில் : ஏ.ஆர்.ஏ. பரீல்
தேசிய தவ்ஹீத் ஜமாத் 2017இல் காத்தான்குடியில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டது. தேசியதாக தவ்ஹீத் ஜமாத்தின் கூட்டம் ஒன்று 2017 .3 .10ஆம் திகதி நடைபெற உள்ளதாகவும் அதில் மக்கள் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சூபி முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இருந்து வெளியேறியவர்கள் என்று தேசிய தவ்ஹீத் ஜமாத் தெரிவிக்கின்றது. ஏன் அவர்கள் இஸ்லாத்தில் இருந்து வெளியேறியவர்கள் என அழைக்கப்படுகிறார்கள் என்பது பற்றி மக்களுக்கு கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் எனவும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கான மேடை காத்தான்குடி - 6 கர்பலா வீதிய சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சஹ்ரான் உரையாற்றவிருந்தார். இதேவேளை இஸ்திஹாத் சுன்னத்வல் ஜமாத் அமைப்பு இக்கூட்டத்தை அங்கு நடத்துவதை எதிர்த்ததுடன் அங்கு கூட்டத்தை நடத்த வேண்டாம் என தேசிய தவ்ஹீத் உறுப்பினர்களைக் கொண்டது.
இந்நிலையில் அங்கு இரு குழுவினருக்கும் இடையில் தர்க்கம் சண்டை உருவானது சூபி முஸ்லிம் ஒருவர் வாளினால் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளானார். இதை அடுத்து இரு குழுக்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த 8 உறுப்பினர்களும் சுன்னத் ஜமாத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தையடுத்து சூபி முஸ்லிம்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு நேரில் சென்று முறைப்பாடு ஒன்றினை கையளித்தனர். முறைப்பாட்டில் சஹ்ரான் கட்டாயமாக கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் பிரதி அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சிக்கும் அனுப்பப்பட்டுள்ளது
2019.04. 26ஆம் திகதி சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் பலியான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர்களில் ஒருவரான நியாஸ் என்பவர் 2017.03.11 ஆம் திகதி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
சூபி முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்களாக கருதப்படுவார்கள். இது தொடர்பாக 1979 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பத்வா வழங்கியுள்ளமை இதனை உறுதி செய்துள்ளது என தனது முகநூல் பதிவில் தெரிவித்து இருந்தார்
2017.3.13 ஆம் தேதி சூபி முஸ்லிம்கள் சஹ்ரானை கைது செய்யுமாறு வலியுறுத்தி காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தார்கள் அத்தோடு அவர்கள் நியாசின் முகநூல் பதிவுக்கு எதிராக
2017. 3. 15ஆம் திகதி காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்து இருந்தார்கள்.
2017.3.27 ஆம் திகதி வலியுள்ளா நம்பிக்கை நிதியம் சஹ்ராறுக்கு எதிராக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், நீதி அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிபு என்பவற்றில் முறைப்பாடு செய்திருந்தது.
அலியார் சந்தி சம்பவத்தின் பின்பு அப்பகுதியில் இருந்தும் தப்பி சென்றார். அவரது மனைவியும் இரு பிள்ளைகளும் கெக்குனுகொல்லவுக்கு சென்றிருந்தார்கள்.
சஹ்ரான் தனது அனுபவத்தின் மூலம் இணையத்தில் அறிவைப் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் நெளபரும் பின்பு காஸ்தூணும் இணையதளத்தை பயன்படுத்துவதற்கு உதவி செய்தார்கள்.
கஸ்தூன் காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாயல் வருகை தந்தபோது 2016 ஏப்ரல் அளவில் சஹ்ரானைச் சந்தித்தார்.
அவர் ஓர் ஐ.எஸ் உறுப்பினர் என சஹ்ரான் தனது மனைவியிடம் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் சஹ்ரான் அன்சார் கிலாபத் குழு ஒன்றினை உருவாக்கினார்.
டெலிகிராம் செயலி மூலம் 200க்கும் மேற்பட்டவர்கள் இக்குழுவில் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். டெலிகிராம் செயலி வாட்ஸ்அப் செயலியை விடவும் பாதுகாப்பானது என சஹ்ரான் மனனவியிடம் கூறினார். ஹாதியாவுக்கு ஹஸ்தூன் டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்து கொடுத்தார்.ஹஸ்தூன் ஓர் இலத்திரனியல் கடையை நடத்தி வந்தவர்.
சஹ்ரான் தலைமறைவான பின்னர் சில காலத்துக்கு தனது முகநூல் கணக்கினையும் பயன்படுத்தவில்லை. 2017 ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்கு பின்பு அவர் தனது முகநூல் கணக்கினை மீண்டும் செயற்பட செய்தார். வன்முறைகளை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். மியன்மார் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை இதற்கு காரணமாக குறிப்பிட்டார்.
2017.09.02 ஆம் தேதி இந்த கொலைகளுக்கு எதிராக போராட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 2017.09. 17ஆம் திகதி ஜிஹாத் போராட்டத்தில் முஹாஜிதீன்கள் வீரமரணம் எய்தியதையும் பதிவிட்டார். இந்த பதிவுக்கு சில முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த கண்டனத்துக்கு இருந்து 2017. 11. 10 ஆம் தேதி ஸஹரான் ஜிஹாத் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் தெரியாதவர்கள் என பதிலளித்தார்.





No comments