Breaking News

கல்வியில் அரசியல் அழுத்தங்கள் இடம்பெறமாட்டாது


அரசியல் பின்புலம் அல்லது வேறு அழுத்தங்களின் மூலம் எக்காரணம் கொண்டும் கல்வித்துறைக்கு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் 4600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், சரியான நடைமுறையில் இந்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்குள் இடம்பெறுகின்ற ஏற்றத்தாழ்வை குறைக்க வேண்டும், அரசியல் அழுத்தங்கள் மூலம் மாணவர்களை பாடசாலைக்குள் உள்வாங்கும் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் கல்வித்துறையின் தரத்திற்காக சரியான வேலைத்திட்டமொன்று நடைமுறையில் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்



No comments