Breaking News

சம்பியன் கிண்ணத்தை சுப்பர் கிங் அணி சுவீகரித்துக் கொண்டது.



கிண்ணியா அக்செரியன் சுப்பர் லீக் உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரை வெற்றி கொண்டு,  2021 ஆண்டின் சம்பியன் கிண்ணத்தை சுப்பர் கிங் (Super King) அணி சுவீகரித்துக் கொண்டது.

எட்டு அணிகள் பங்கு கொண்ட இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று (14)  கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்றது.




 UnV நிறுவனத்தின் பிரதான அனுசரணையோடு நடைபெற்ற  இந்த தொடரின் முதல்  அரையிறுதி ஆட்டத்தில சுப்பர் கிங் மற்றும் ஜுபிடர் ஆகிய அணிகள் மோதின.

இதில் 3:1 என்ற கோல் அடிப்படையில் ஜுபிடர் அணியை வெற்றி பெற்று, தனது இறுதிப்போட்டிக்கான கனவை நனவாக்கியது சுப்பர் கிங் அணி.

இந்த தொடரில் சுப்பர் கிங் அணி மூன்று போட்டிகளைச் சந்தித்து மொத்தமாக 4 கோல்களைப் போட்டு 9 புள்ளிகளைப் பெற்று 2வது இடத்துக்கு வந்தது.

இரண்டாவது அரையிறுதி  ஆட்டத்தில் சுப்பர் பைட்டர் மற்றும் ரேஸின் ஸ்டார் ஆகிய இரு அணிகளும் மோதின.

இந்தப் போட்டி 1:1 என்ற  கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனல் வெற்றி தோல்வி பெனால்டி உதை மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

இதனடிப்படையில் ரேஸின் ஸ்டார் அணி 6 : 5 என்ற கோல் அடிப்படையில் பெனால்டி உதை மூலம்   போட்டியை வென்று இறுதியாட்டத்துக்கான தகுதியை தனதாக்கிக் கொண்டது.

ரேஸின் ஸ்டார் (Racing Stars) அணி இந்த  தொடரில் 3 போட்டிகளில் விளையாடி  மொத்தம் 3 கோல்களைப் பெற்று, 7 புள்ளிகளுடன் முதல் பிரிவில் 2 ஆம் இடத்தைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில் ரேஸின் ஸ்டார் அணியும் சுப்பர் கிங் அணியும் இறுதி ஆட்டத்தில் மோதுவதற்கான தகுதியைப் பெற்றுக் கொண்டன.

பார்வையாளர்களின் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டம் இறுதி வரை இரு அணிகளும் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது.

பலத்த போராட்டடத்துக்கு மத்தியில் ஆட்டம் நிறைவடை சில நிமிடங்கள் இருக்கையில், சுப்பர் கிங் அணி கோல் ஒன்றைப் போட்டி, 1: 0 என்ற கோல் கணக்கில் வெற்றிக் கனவை நனவாக்கி 2021 ஆம் ஆண்டுக்கான அக்செரியன் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இந்த தொடரின் 3வது இடத்தை 
ஜுப்பிடர்ஸ் அணி பெற்றுக் கொண்டது. 

இந்த தொடரில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு முறையே தலா 50,000 40,000, 30,000 ஆயிரம் ரூபா பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது .

நான்காம் இடத்தைப் பெற்ற அணிக்கு 20 ஆயிரம் ரூபா பணப்பரிசும் போட்டியில் பங்கு கொண்ட ஏனைய அணிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது -.

தொடரின் சிறப்பாட்டக்காரருக்கு மௌண்டன் பைசிகள் ஒன்றும் கேடயமும் வழங்கப்பட்டதோடு, தொடரின் சிறந்த கோல் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டவருக்கு 5,000 பணப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. 

பிரதான அனுசரணையாளரான UnV நிறுவனத்தின் பணிப்பாளர் பாராளமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதம அதிதியாக கலந்து பரிசில்களை வழங்கி வைத்தார். 

தொடருக்கான விளம்பர அனுசரணையை மைலோ கம்பனி செய்திருந்தது.  





No comments