பாடசாலை விடுமுறை காலம் குறைக்கப்பட்டது,
2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் பாடசாலை விடுமுறை காலத்தை ஒரு வாரம் வரை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.
பாட விதானங்களை முழுமைப்படுத்துவதற்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைகளை ஒக்டோபர் மாதம் 4ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று, புலமை பரிசில் பரீட்சைகளை ஒக்டோபர் மாதம் 3ம் திகதி ஞாயிற்றுகிழமை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகளை 2022ம் ஆண்டு ஜனவரி மாத இறுதி வாரத்தில் நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறுகின்றார்.
இவ்வாறான பின்னணியில், மாணவர்களுக்கு நீண்ட விடுமுறைகளை வழங்க முடியாது உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பரீட்சைகளுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கு பாடசாலை விடுமுறை காலத்தை குறைக்க தீர்மானித்ததாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
குறிப்பு :-
இந்த இணையத்தளத்தின் அனைத்து படைப்பாக்கங்களையும் பின்தொடர (follow பண்ண) முகநூல் பக்கத்தை கட்டாயம் Like செய்து கொள்ளுங்கள்.
Like ✔️ Comment ✔️ Share
https://www.facebook.com/newstimetamil/






No comments