Breaking News

சஜித் மெளனம் ஏன்?

 

றிசாட்டின் கைது விவகாரத்தில் சஜித் மெளனமாக இருப்பதன் மர்மம் என்ன?  

நாங்கள் நம்பி வாக்களித்த சஜித் பிரேமதாசவும் அவரோடு நெருங்கியவர்களும் முன்னாள் அமைச்சர்  றிசாட்டின் விடுதலைக்காக முதலில் குரல் கொடுக்க வேண்டியவர்கள். ஆனால் இன்றுவரை நேரடியாக எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் மெளனமாக  இருக்கிறார்கள். இந்த நிலையானது முஸ்லிம்கள் மத்தியில் விமர்சனத்தையும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி, நேற்று (3) கிண்ணியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட இவ்வூடக சந்திப்பில், அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என்பதில் எமது எமது தலைவர் காட்டிய ஆர்வத்தில் ஒரு வீதத்தை காணும், தலைவரின் விடுதலைக்காக  சஜித் பிரேமதாச காட்டவில்லை.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதாக இருந்தால் சட்டப்படி சபாநாயகரிடம் அல்லது நீதிமன்றத்திடம் அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் மீதான சாட்சிகள் இருக்கின்றது என்று கூறிவிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. எனவே, சட்டமா அதிபர் உடைய அனுமதியை கூட பெற்றிருக்க வில்லை என்றால் இந்த கைதின் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், அவரது விடுதலைக்காக சஜித் பிரேமதாச மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவரது விடுதலைக்காக வேண்டி ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எதிர்கால அரசியலில் எங்களுடைய ஆதரவை யாருக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது  நாங்கள்தான். எனவே நாங்கள் ஒரே கட்சிக்கு பின்னால் தான் இருக்கிறோம் என்பதை யாரும் கூற முடியாது. இந்த இடத்தில் எங்களுடைய தலைவரின் விடுதலையே முக்கியமானது. 

இந்த செய்தியை பெரிய கட்சிகளுக்கு நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம். எங்களுடைய அமைச்சருக்கு கீழ் இருந்த அதிகாரிகள் எவரும் முஸ்லிம்கள் இல்லை. சம்பிக்க பிரேமதாஸ, புத்திக பத்திரன இவர்கள்தான் இருந்தார்கள். எனவே செப்புத்தகடு விஷயத்தில் இவர்கள்தான்  கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

என்ன விசாரணைக்கு என்னை அழைக்கின்றார்கள் என்று  தெரியாமலே என்னை அதிகாலையில் கைதுசெய்தார்கள். அந்த ஒரு மாதத்திலும் நான் பட்ட வேதனை என்னை ஒரு நோயாளியாக மாற்றி இருக்கின்றது.

இனத்தின் பெயரால் எங்களுடைய கட்சி இல்லை.மதத்தின் பெயரால் இல். அது ஒரு பொதுவான சகல மக்களுக்கும் உரிய கட்சியாகும். எனவே றிசாட் ஒரு பொதுவான தலைவர். எமது கட்சி சார்பில் நாடு பூராவும் சகல இனங்களையும் சேர்ந்த  268 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிங்கள மக்கள் இருக்கிறார்கள். 

30 வருட கால யுத்தம் பல உயிர்களை காவு கொடுத்துதான் நிறைவு செய்யப்பட்டது. ஆனால் இந்த சஹ்ரானின் நிகழ்ச்சி நிரல் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஒத்துழைப்போடு பத்து நாட்களில் நிறைவுக்கு கொண்டு வந்தது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் எந்த ஒரு பயங்கரவாதத்துடனும் தொடர்பு இல்லை என தற்போது நீதி அமைச்சர் அலி சப்ரி பகிரங்கமாகவே தெரிவித்துள்ள விடயமானது  அரசாங்கத்துக்கு மிக முக்கியமான ஒரு சாட்சியாகும்.

எனவே எங்களுடைய தலைவருக்கு சிறைக்கூடத்தில் தொல்லை கொடுக்காமல் ஒரு கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவரை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வகையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும்  பிராந்திய  உலமா சபை தலைவர்களும் ஒன்று சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்து


இந்த சட்டவிரோத கைதினை கண்டித்து,  தலைவரை விடுவிக்க உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறோம். 


திருகோணமலை மாவட்டத்திலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட மக்கள் சார்பில் ஜனாதிபதியிடம் நாங்களும்  இந்த கோரிக்கையை முன் வைக்கின்றோம். 

கடந்த பாராளுமன்றத்தில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் எந்த ஒரு அமைச்சரும் விசாரிக்கப்படாத அளவுக்கு எமது தலைவர் விசாரிக்கப்பட்டார். ஆனால், அவர் ஓடி ஒழிக்காமல் அனைத்து விசாரணைகளாயும் முகம் கொடுத்தார்.

எனவே, இப்போதும் அவரது விடுதலை செய்துவிட்டு உங்களுடைய சாட்சிகளைக் கொண்டு அவரை விசாரணை செய்யுங்கள். அவர் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவார். ஆனால் ஆதாரம் இல்லாமல் அவரை அநியாயம் செய்யாதீர்கள். நிரபராதி தண்டிக்கப்படும் போது,  அதனுடைய  விளைவை  நீங்கள் இறைவனிடத்தில் பெற்றுக் கொள்வீர்கள்.

வேறு ஒருவருடைய தேவையை நிறைவேற்றுவதற்காக ஒரு நிரபராதி சிறைக்கூடத்தில் தண்டிக்கப்படுவதை எந்த வகையிலும் இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான். சூழ்ச்சி காரர்களுக்கெல்லாம் மிகப் பெரிய சூழ்ச்சிகாரன் இறைவன் என்பதை நாங்கள் நம்பியிருக்கிறோம் என்றும்் தெரிவித்தார்.



No comments