ஹிஸ்புழ்ழாஹ்வின் அனுதாபம்!
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”
றாஸிக் ஹாஜியார் அவர்களது மரணச் செய்தி மிகுந்த கவலை தருகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா ஹனீபா டெக்ஸ் உரிமையாளரும் காத்தான்குடி பதுரிய்யா வீதியைச் சேர்ந்த மர்ஹூம் MHA ராஸிக் ஹாஜியார் அவர்களது மரணச் செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைகின்றேன்.
அவர் மிகச் சிறந்த ஒரு வியாபாரி. அதே நேரம் சமூக சமயப் பணிகளில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர். என்னுடைய அரசியல் பயணத்திலே அன்று முதல் இன்று வரை வெற்றியிலும்,தோல்வியிலும் தோள் கொடுத்த ஒரு சகோதரர்.
ரமழான் மாதத்தின் 26 வது நோன்பு நிலையிலே அவர்கள் மரணித்து இருக்கிறார்கள்.
அல்லாஹுத்தாலா அவர்களுக்கு மேலான சுவனத்தை கொடுக்க வேண்டும் என்றும் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்திற்கு பொறுமையை இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்திப்போமாக.






No comments