Breaking News

விபத்தில் நபர் ஒருவர்

அனுராதபுரம் - திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம மொரகந்த பிரதேசத்தில் புத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments