அர்ஸாத்மருத்துவத் துறைக்கு தெரிவு
ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அர்ஸாத் மாவட்டத்தில் 2 ம் இடம் பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவு
(எச்.எம்.எம்.பர்ஸான்)
வெளியான க.பொ.த.உயர் தரப் பரீட்சை பெறுபேற்றின் படி ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் முகம்மது உவைஸ் முகம்மது அர்ஸாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை – மாவடிச்சேனை எம்.பி.சீ.எஸ் முகவரியில் வசித்து வரும் எம்.எல்.எம்.உவைஸ், எம்.எஸ்.ஜெமீலா தம்பதிகளின் புதல்வரான அர்ஸாத் இளம் வயதிலிருந்தே கற்றல் நடவடிக்கையில் மிகவும் ஆர்வம் கொண்டவராவார்.
இவர், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதோடு, க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்தார்.
இவ்வாறு கல்வித் துறையில் சாதனைகளை படைத்து மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இம் மாணவனை நாங்களும் வாழ்த்துகிறோம்.





No comments