Breaking News

குளியலறையில் வழுக்கி விழுந்து மரணமானவருக்கு கொரோனா!




குளியலறையில் வழுக்கி விழுந்து மரணமானவருக்கு கொரோனா!

( கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (15) மேலும் 13 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அதில் குளியலறையில் வழக்கி விழுந்து மரணமடைந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது     என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

எமது அலுவலகத்தால்  22 பேருக்கு மேற்கொள்ளபட்ட  அன்டிஜென் பரிசோதனையில்,6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 6 நபர்கள் பெரிய கிண்ணியா கிராம சேவகர் பிரிவையும் ஒருவர் மாஞ்சோலைச்சேனை கிராம சேவகர் பிரிவையும்  சேர்ந்தவராகும். 

இதேபோன்று, கிண்ணியா தள வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 7 நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். குளியலறையில் வழக்கி விழுந்து மரணமான 78 வயதான ஆண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, குறிஞ்சாக்கேணி சுகாதாரப் பிரிவில், நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில், 6 நபர்கள் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்தியதிகாரி ஏ.எம்.ஏ. அஜீத் தெரிவித்தார்.

இதில் 4 நபர்கள் குறிஞ்சாக்கேணி கிராம சேவகர் பிரிவையும் ஒருவர் முனைச்சேனை கிராம சேவகர் பிரிவையும் சேர்ந்தவர்களாவர்.

அத்தோடு, குறிஞ்சாக்கேணி சுகாதார பிரிவின் நடுத்திவு பகுதியில் மரணமான ஆண் ஒருவருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட போதும், அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனினும் கொரனர் உடைய அறிவுறுத்தல்களுக்கு அமைய, PCR பரிசோதனைக்காக அவரது உடல் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர்  தெரிவித்தார்.


No comments