Breaking News

தினோஜன் விஞ்ஞான பிரிவில் முதலிடம்!

 



மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் தினோஜன்..!

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  விஞ்ஞான பிரிவில்  மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன்  முதலிடத்தை பெற்றுள்ளார்

இவர்  தனது ஆரம்பக் கல்வியை கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்திலும்   பின்னர் களுவாஞ்சிகுடி  பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் கற்று பாடசாலைக்கும் ஊரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்

மகிழூர் கண்ணகிபுரத்திலிருந்து மருத்துவ துறைக்கு  தெரிவாகும் முதலாவது மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது .

மண்டூர் மகா வித்தியாலய அதிபரான  தம்பிப்பிள்ளையின் மகன் ஆவார்.

நாங்களும் வாழ்த்துகிறோம்!  www.newstimetamil.com 


No comments