Breaking News

கடந்த 7 நாட்களில் கிழக்கில் மொத்தமாக 1166 பேர் என பாதிப்பு!!




(கியாஸ் ஷாபி)

கொரோனா  தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 150 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தெளபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் கொரோன தொற்று நிலைவரம் தொடர்பாக இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இதில் ஆகக்கூடுதலாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பிரிவில் 64 பேரும் திருகோணமலை பிராந்திய சுகாதாரப் பிரிவில் 45 பேரும் கல்முனை சுகாதாரப் பிரிவில் 23 பேரும் அம்பாரை பிராந்திய சுகாதாரப் பிரிவில் 8 பேரும் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். 

அத்தோடு, இதே காலப்பகுதிக்குள் திருமலை, கல்முனை ஆகிய பகுதிகளில் தலா இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் கடந்த 7 நாட்களில் கிழக்கில் மொத்தமாக  1166 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அத்தோடு 39 மரணங்களும் நிகழ்ந்திருக்கிறது. இது கடந்த  வாரங்களோடு ஒப்பிடும் போது,  சிறிது குறைவானதோர் எண்ணிக்கையாகும். எதிர்வரும் தினங்களில் மேலும் குறையும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். 

கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரமன்றி இந்த நாட்டுக்கே இது முக்கியமான காலகட்டமாகும். அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுரைகளை மக்கள் சரியாக கடைப்பிடிப்பதன் மூலமாக கொரோனா சவாலில் இருந்து நம்மையும் நாட்டையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு துரித முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த வகைையில், கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட 75,000 தடுப்பூசிகளும் 60க்கும் மேற்பட்டோர் களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர்,

அடுத்த கட்டமாக,  இப்போது விடுபட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அரசாங்க சேவையில் பணிபுரியும் கள உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட விசேட தொழில் குழுவினருக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments