கிண்ணியாவில் பலர் கைது!!
(கியாஸ் ஷாபி)
பயணத் தடையை மீறி வீதிகளில் தேவையற்ற வகையில் நடமாடிய பலர் நேற்று (14) கிண்ணியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா புஹாரிச் சந்தியில் இன்று மாலை பொலிஸார் திடீர் வீதிச் சோதனை நவடிக்கையை மேற்கொண்ட போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றோர், ஈருளியில் சென்றோர், வாகனங்களில் சென்றோர் மற்றும் கால் நடையாகச் சென்றோர்களில் பயணத்துக்கான தகுந்த அனுமதி ஆவணங்களை காட்டத் தவறியோர் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.








No comments