கிண்ணியாவில் 2 ஆம் கட்ட தடுப்பூசி
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (8) முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாம் கட்ட கொரொனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட வர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை, பெரிய கிண்ணியா, கிண்ணியா, மாலிந் துறை, எகுத்தார் நகர், குட்டி கராச்சி, ஆலங்கேணி போன்ற கிராம சேவகர் பிரிவுகளில் வசிப்பிடமாகக் கொண்டு முதலாம் கட்ட ஊசியை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாம் கட்ட ஊசியை பெற்றுக்கொள்வதற்காக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோன்று சின்னக் கிண்ணியா, ரஹ்மானியா நகர், மாஞ்சோலை, மாஞ்சோலைசேனை, அண்ணல் நகர், மஹ்ரூப் நகர் போன்ற பிரதேசங்களில் வசிப்பவர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.








No comments