மக்கள் வங்கியின் 60 ஆண்டு வரலாற்று நூல் பிரதமரிடம் வழங்கிவைப்பு!
மக்கள் வங்கியின் 60 ஆண்டு கால வரலாற்று பெருமையை உள்ளடக்கிய வரலாற்று நூல் அதன் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ இன்று (16) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
60 ஆண்டு காலங்களாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மக்கள் வங்கி வழங்கிய பங்களிப்பு மற்றும் அக்காலப்பகுதியில் வங்கியின் வளர்ச்சிக்காக செயற்பட்ட தலைவர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொது முகாமையாளர்கள் தொடர்பான விபரங்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அறுபது ஆண்டுகால வரலாற்றில் மக்கள் வங்கி 14 மில்லியன் மக்களுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதுடன், அதற்கமைய 18 மில்லியன் வங்கிக் கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நம் நாட்டின் இலத்திரனியல் வங்கித்துறையின் முன்னோடியாகத் திகழும் மக்கள் வங்கி 2.3 ட்ரில்லியன் இருப்பு நிலைக் கணக்கை கொண்டுள்ளது.
மக்கள் வங்கியில் 8000 ஊழியர்கள் சேவையாற்றுவதுடன், நாடு முழுவதும் 748 கிளைகள் இயங்கி வருகின்றன.
60 ஆண்டுகளாக நாட்டிற்காக தொடர்ச்சியான சேவையை வழங்குவதற்கு மக்கள் வங்கி ஆரம்பம் முதல் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் மற்றும் வங்கியின் படிப்படியான பரிணாமம் தொடர்பிலும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தலைவர் சுஜீவ ராஜபக்ஷ நூலை வழங்கிவைத்து பிரதமருக்கு விளக்கமளித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் மக்கள் வங்கியின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான ரஞ்சித் கொடிதுவக்கு, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







No comments