Breaking News

ஷரிப் சேரின் மறைவுக்கு மஜ்லிஸ் சூராவின் அனுதாபங்கள்!

கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த  கிண்ணியா மத்திய கல்லூரி முன்னாள் அதிபரும் சமூக சேவையாளருமான எஸ்.எச்.எம். ஷரிப் என்ற முதுசத்தின் மறைவுக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கிண்ணியா மஜ்லிஸ் சூரா அனுதாப செய்தி  ஒன்றை விடுத்துள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இன்று இறையடி சேர்ந்த  சரிப் சேர் எல்லோராலும் நேசிக்கப்பட்டவராவார். எல்லோராலும் நேசிக்கபடுவது என்பது அள்ளாஹ் ஒருவருக்கு வழங்கும் பெரும் அருளாகும்.

அந்த அருளைப் பெற்றவர் "சரிப் சேர்" என்றாள் மிகையாகாது.

ஆசிரியராக, அதிபராக, சமூக சேவகராக, சமூக உருவாக்கத்தின் மூல வேராக, நல்ல விடயங்களுக்கு எப்போதும் ஆதரவளிப்பவராக எல்லோரையும் நேசிப்பவராக வாழ்ந்து அனைவரது உள்ளங்களையும் வென்றெடுத்த முன்னாள் அதிபர் சரிப் சேர் அவர்களுடைய மறைவுக்கு கிண்ணியா சூரா சபை தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

சூரா சபையின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து சிறப்பான ஆலோசனைகளை எப்போதும் வழங்கிய, வழங்கிக் கொண்டிருக்கின்ற ஒருவர் .மேலும் எந்த நேரத்திலும் சிறப்பான ஆலோசனைகளை வழங்கி சூரா சபை வளர்ச்சிக்கு உதவுபவர்.

இவர் ஒரு பன்முக ஆளுமை. அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியானவர். பலவிதமான சமூகப் பொறுப்புகளை அவர் ஏற்று இருந்தபோதிலும் அந்தப் பொறுப்புகளை எந்தவிதமான சுயநலமும் இல்லாமல் நேர்மையாகவும் கடமை உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் மேற்கொண்ட அன்னாரின் கப்ரை அல்லாஹ் விசாலமாக்கி சொர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்கி வைப்பானாக. அன்னார் செய்த அனைத்து நலன்களையும் ஏற்றுக்கொண்டு உயர்ந்த சொர்க்கத்தை அல்லாஹ் வழங்குவானாக.

அன்னாரை இழந்து தவிக்கும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் மன அமைதியை வழங்குவானாக என்றும்  தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 


No comments