Breaking News

இரங்கல் செய்தி

 

பிரான்சின் ஜேதவன விகாராதிபதி, மஹா விஹாரவங்ஷிக சியோமோபாலி மஹா நிகாயவின் மல்வத்து விகாரை பீடத்தின், பிரான்சின் பிரதான அதிகரன சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி முருங்கஸ்யாயே ஞானீஸ்ஸர நாயக்க தேரர் அவர்களது மறைவு செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தமடைந்தேன்.

சிறுவயதிலிருந்தே புத்த சாசனத்தின் மீது கொண்ட பற்று காரணமாக 66 வருடங்களாக சம்புத்த சாசனத் துறையில் சிறந்த ஒளியேற்றிய நாயக்க தேரர் அனைவரது மனங்களையும் வென்றுள்ளார்.

ஒரு துறவியாக கல்விக்காக அர்ப்பணித்த நாயக்க தேரர், 1968 ஆம் ஆண்டு வருடத்திற்கு ஒரு மாணவருக்கு மட்டுமே வழங்கப்படும் ஷ்யாம ராஜ பரிசையும் வென்றார்.

பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பெற்ற அவர், நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

கொரோனா தொற்று காரணமாக பல ஆண்டுகளாக இலங்கைக்கு வருகைத்தாவிடினும், அதற்கு முன்னர் வருடாந்தம் தாய்நாட்டிற்கு வருகை தந்த நாயக்க தேரர், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல், மூக்குக்கண்ணாடி வழங்குதல் என பல சமூக சேவைகளை செய்த துறவியாவார்.

வெளிநாட்டிலும் னது பணியை முறையாகச் செய்த தேரர், வெளிநாடுகளில் வாழும் பிக்குகளாலும், வெளிநாட்டு மக்களாலும் போற்றப்பட்டார்.

என்னுடன் மிகுந்த நட்புடன் செயற்பட்ட நாயக்க தேரர் அவர்கள், இலங்கைக்கு வருகைத்தரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் என்னை சந்தித்து நலன் விசாரிப்பதுடன், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வழங்கிய ஆலோசனை மற்றும் அனுசாசனத்தினை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

தனது 76ஆவது வயதில் காலமான வணக்கத்திற்குரிய கலாநிதி முருங்கஸ்யாயே ஞானீஸ்ஸர நாயக்க தேரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.



மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்

பிரதமர்



No comments