கிண்ணியாவில் 26 குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகள்.
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற 26 குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று(2) இடம்பெற்றது.
ஜேர்மன் குடியரசின் நிதி உதவியோடு டீம் ஹியூமிடி(Team Huminity) அனுசரணையோடு, இந்த மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டன.
ஜேர்மன் குடியரசின் இலங்கைக்கான தூதுவர்
ஹொல்கர் சேபேர் இதனை மக்களுக்கு கையளித்தார்.
இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ச பாண்டிகோரல, ஜேர்மன் குடியரசின் இலங்கைக்கான வர்த்தக அபிவிருத்தி உத்தியோகத்தர் தாரணி தல்வத்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்





No comments