Breaking News

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்

இலங்கை நீதித்துறை அலுவலர்கள் 72 பேருக்கான இடமாற்ற பட்டியலை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்த இடமாற்றங்கள் யாவும், 05.04.2021ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகின்றன.

இதன் பிரகாரம், திருகோணமலை, கல்முனை, மன்னார், மூதூர், வவுனியா, சம்மாந்துறை கல்முனை நீதிமன்றங்களில் பின்வரும் இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

திருகோணமலை மாவட்ட நீதிபதி பி.சிவகுமார், மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் மன்னார் மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா, திருகோணமலை மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர் .

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும்

கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் ஏ.எம்.எம்.றியாழ் கல்முனை மாவட்ட நீதிபதியாகவும்

கல்முனை மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் பயாஸ் ரஸ்ஸாக், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.

திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றும் திருமதி இலங்கசிங்க, தம்புள்ள மாவட்ட நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

மூதூர் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் எம்.எஸ்.எம் சம்சுதீன், கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார். வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் திருமதி எச்.எம். தஸ்னீம், மூதூர் மாவட்ட நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.







No comments